ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி நடிக்கும் 'மாரி 2' படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணா நடித்த 'கழுகு' படத்தைத் தவிர வேறு எந்த படங்களும் அவருக்குப் பெரிய பேரை வாங்கித் தந்ததில்லை. 'யாமிருக்க பயமே' படம் கதைக்காகத்தான் ஓடியது. மற்றபடி கிருஷ்ணா பெரும்பாலும் தோல்விப் படங்களில் தான் நடித்திருக்கிறார்.
இருந்தாலும் அந்த ராசி எல்லாம் பார்க்காமல் தனுஷ், கிருஷ்ணாவை 'மாரி 2' படத்தின் இரண்டாவது நாயகனாக ஒப்பந்தம் செய்திருப்பது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
எப்படியோ, 'மாரி 2' படத்திலாவது மீட்டருக்கு மேல் நடிக்காமல் யதார்த்தமாக நடித்து கிடைத்த வாய்ப்பை கிருஷ்ணா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.