‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சஞ்சய் தத்தை தொடர்ந்து பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் ரன்பீர் கபூர். பாலிவுட்டின் மிகச்சிறந்த பாடகர் கிஷோர் குமார். பாடகராக மட்டுமல்லாது, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரது வாழ்க்கையை அனுராக் பாசு படமாக எடுக்க உள்ளார். இதில் ரன்பீர் கபூர் நடிப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அனுராக் பாசு கூறுகையில், கதை தயாராகிவிட்டது. அதை தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. கிஷோரின் வாழ்க்கையை படமாக்குவதற்கு முன்னர் நிறையபேரிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் படத்தை துவங்க வேண்டும் என்று எண்ணியுள்ளோம். தற்போது ரன்பீர் சஞ்சய் தத் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அயன் முகர்ஜியின் டிராகன் படத்தில் நடிக்கிறார். இதை இரண்டையும் முடித்து 2019-ல் தான் அவரது கால்ஷீட் கிடைத்திருக்கிறது. ஆனால் கிஷோர் குமாரின் குடும்பத்தார், இப்போதே படத்தை துவக்க வேண்டும் என்கிறார்கள், ஆகையால் அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அனுராக் கூறியுள்ளார்.