‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.5500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டி, அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ஜெய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெய், நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் அஜராகாததால் இரண்டு நாளில் ஜெய்யை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய் இன்று காலை சரண் அடைந்தார்.
தொடர்ந்து நீதிபதியிடம், தான் போதையில் கார் ஓட்டியதை ஒப்புக் கொண்டார் ஜெய். இதையடுத்து, ஜெய்யின் ஓட்டுனர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதோடு ரூ.5,500 அபாராதமும் விதித்தார். நீதிபதியின் இந்த உத்தரவால் 6 மாத காலத்திற்கு ஜெய் காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேப்போன்று ஜெய் போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.