‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சென்னை : தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிடுகிடு என உயர்ந்துள்ளது.
நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி., கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. சினிமாவை பொருத்தமட்டில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 18 மற்றும் 28 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. கூடுதலாக தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின் அந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் ஒரு குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டதில் 30 சதவீதம் கேளிக்கை வரியை, 10 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டது. இதற்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 38 (28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீத கேளிக்கை வரி) சதவீத வரியை எங்களால் செலுத்த முடியாது என கூறி நேற்று முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
தியேட்டர்களை மூட இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். அதோடு தியேட்டர் கட்டணத்தை உயர்த்த அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தியேட்டர் கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில்...
புதிய கட்டணம்
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் குறைந்தபட்சமாக ரூ.50 கட்டணமும், அதிகபட்சமாக ரூ.160-வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.10 மற்றும் ரூ.120 ஆக இருந்தது. மற்ற நகரங்களில் அதிகப்பட்சமாக ரூ.140 தியேட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன டிக்கெட் கட்டணம் வரி இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீதம் கேளிக்கை வரி சேர்த்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அதிகபட்ச கட்டணமாக ரூ.220-வும், மல்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் அதிகபட்சமாக ரூ.193 கட்டணமும் வசூலிக்கப்படும்.
இதுவே ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது, குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் மல்டிபிளக்சில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.250-ம், மல்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் ரூ.223-ம் வசூலிக்கப்படும்.
டிக்கெட் கட்டணம் தவிர்த்து தின்பண்டம் விலையும் சேர்த்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் குறைந்தது ஒரு நபருக்கு ரூ.300 ஆகும். இதுவே ஒரு குடும்பமாக 5 பேர் சென்றால் ரூ.1500-ஆகும்.
இக்கட்டண உயர்வு, கிராமப்புறம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியைப் பொறுத்து மாறும்.
ரசிகர்கள் ஏற்பார்களா?
ஏற்கனவே டிக்கெட் விலை தின்பண்டங்களின் விலை உயர்வால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.