‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
'திருமணம் எனும் நிக்காஹ்', 'நேரம்', 'ராஜா ராணி', 'நய்யாண்டி' என நஸ்ரியா தமிழில் நடித்தது சில படங்கள்தான். அதற்குள் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நஸ்ரியா நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ்ப்படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'. இவர் தமிழில் ஒப்புக்கொண்ட முதல் படம் இதுதான். ஆனால் பல வருடங்கள் முடங்கிக்கிடந்து தாமதமாக வெளியானது.
மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் நஸ்ரியா! அஞ்சலி மேனன் இயக்கத்தில் பஹத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, பார்வதி முதலானோருடன் நஸ்ரியா நடித்த 'பெங்களூர் டேஸ்' திரைப்படம் மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அதே அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா மீண்டும் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18-ஆம் தேதி முதல் ஊட்டியில் துவங்கவிருக்கிறது. மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் நஸ்ரியாவுடன் பிருத்திவிராஜ், பார்வதி ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள்.
அஞ்சலி மேனன் எழுதி இயக்கும் இந்த படமும் 'பெங்களூர் டேஸ்' படம் மாதிரி 'யூத்'துக்கான படமாம். அனேகமாக இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.