‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சினிமாவுக்கு வெளியே எத்தனையோ திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. இந்த வரிசையில், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியான இவர், அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால், 'வேதாளம்' மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருப்பன்'ஆகிய படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.
தயாரிப்பாளராக இருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கில் உருவாகி வரும் 'ஆக்சிஜன்' என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாகி இருக்கிறார். இப்போது 'கூத்தன்' என்ற படத்திற்காகவும் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.
'கூத்தன்' படத்தில் பாலாஜி இசையில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளர். ஐஸ்வர்யாவுக்கு நல்ல குரல் வளம் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை ஒரு பாடலை பாட அழைத்திருக்கிறார்கள்.
அவர் அந்த பாடலை பாடிய விதம், குரலின் இனிமை ஆகியவை தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும், இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்து போனதால் மற்றொரு பாடலையும் அவருக்கே கொடுத்துள்ளனர். ஏ.எல்.வெங்கி இயக்கத்தில் அறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் இது.