‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது படமான 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் டி.இமான் இசை அமைக்கும் ஐந்தாவது படம் இது. இப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும், விக்ராந்தும் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் விளம்பரங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார் விக்ராந்த்.
இது குறித்து விக்ராந்த் வெளிப்படையாக தன்னுடைய மன வருத்தத்தை சொல்லவில்லை. இந்நிலையில், நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இது பற்றி விளக்கம் அளித்தார் இயக்குநர் சுசீந்திரன்.
“இந்த படம் தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியில் உருவாகிறது. இதற்கு காரணம் யாருன்னா இந்தப்படத்துல கதாநாயகனாக நடிச்சிருக்குற சந்தீப் கிஷன் தான். அவருதான் இந்த படத்துக்கான தெலுங்கு தயாரிப்பாளர்களை கொண்டு வந்தாங்க. இந்த படத்துல இன்னொரு ஹீரோவா விக்ராந்த் நடிச்சிருக்கார்.
ஆனா, அவரோட ஒரு படத்தை கூட போஸ்டர்லயோ, விளம்பரங்கள்லயோ போட்டிருக்க மாட்டேன். விக்ராந்த், நீ அதை தவறா எடுத்துக்க வேண்டாம். நான் உருவாக்குன ஒரு ஹீரோதான் விஷ்ணு விஷால்! அவரைப்போல இப்போ நான் உன்னை (விஷ்ணு விஷால்) ஒரு ஹீரோவா உருவாக்கிகிட்டு இருக்கேன். கூடிய விரைவுல இந்த தமிழ்சினிமாவுல நீயும் ஒரு ஹீரோதான்'' என்றார்.