‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
ராஜமௌலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பலர் நடித்த 'பாகுபலி 2' படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
சுமார் 1700 கோடி வரை வசூலித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டிவியில் நாளை ஒளிபரப்பாக உள்ளது.
ஹிந்தியில் சோனி மேக்ஸ் டிவியில் நாளை பிற்பகல் 1 மணிக்கும், தமிழில் விஜய் டிவியில் பிற்பகல் 3 மணிக்கும், தெலுங்கில் ஸ்டார் மா டிவியில் மாலை 5 மணிக்கும் 'பாகுபலி 2' படத்தின் டிவி பிரிமீயர் ஒரே நாளில் 3 மொழிகளில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர்களில் படங்களை ஒரே நாளில் வெளியிட்டது போல, டிவியிலும் ஒரே நாளில் ஒளிபரப்புவது ஆச்சரியமான ஒன்றுதான். 3 மொழி டிஆர்பியும் சாதனை படைக்குமா என்பது அடுத்த வாரம் தெரியும்.
'பாகுபலி 2'-வின் மலையாள டிவி ஒளிபரப்பு ஆகஸ்ட் 27ம் தேதி ஏசியா நெட் டிவியில் ஒளிபரப்பானது.