‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்களிலோ, குறிப்பிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் ஒரு நடிகரோ, நடிகையோ நடித்தால் அவர்கள் அப்படிப்பட்ட படங்களுக்கும், கதாபாத்திரங்களுக்கும் தான் பொருத்தமானவர்கள் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.
பல நல்ல படங்களில் நடித்து தனக்கென தனிப் பெயரை உருவாக்கிய கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், மணிரத்னம் படத்தில் அறிமுகமானாலும் இன்னும் சரியான அடையாளத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்.
அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த அடல்ட்ஸ் ஒன்லி படமான ஹரஹர மகாதேவகி படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். அப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இன்று இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பும் அந்த டிசைனில் இடம் பெற்றுள்ள ஆணுறை, பிரா போன்றவை இப்படம் என்ன மாதிரியான படம் என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன.
இப்படிப்பட்ட படங்களின் நடிப்பதன் மூலம் தன்னை செக்ஸ் பட நாயகனாக அடையாளப்படுத்த கௌதம் கார்த்திக் விரும்புகிறாரோ என்று சந்தேகிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட படங்களில் அவர் நடித்தால் மற்ற முன்னணி இயக்குனர்கள் கௌதம் கார்த்திக்கை எப்படி அணுகுவார்கள்.