‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
மெர்சலாயிட்டேன் என்ற படத்தை தயாரித்து வரும் ராஜேந்திரன் என்பவர், விஜய்யின் மெர்சல் பட தலைப்புக்கு தடை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால் தற்காலிகமாக மெர்சல் தலைப்பை பயன்படுத்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சுக்கு தடை விதித்த நீதிமன்றம் நேற்று அந்த தடையை நீக்கியதோடு, மெர்சல் என்ற தலைப்பிற்கு ராஜேந்திரன் தடை கோரியிருந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அதனால் மெர்சல் படத்திற்கான தடை நீங்கி விட்டது.
அதோடு, இந்த படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதால், ஜல்லிக்கட்டு காளைகள் படத்தில் நடித்துள்ளன. அதனால் விலங்குகள் நல வாரியத்திடமும் முன்பே சான்றிதழ் பெற்று விட்டார்களாம். அதனால் தீபாவளிக்கு மெர்சல் திரைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை என்கிறார்கள். இதையடுத்து, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியின் மனைவி ஹேமா ருக்குமணி, மெர்சல்- இது பெயர் அல்ல உணர்வு, தடைகளை தாண்டி வருகிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.