‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
இசையமைப்பாளராக வளர்ந்து பின்னர் ஹீரோ ஆனவர் ஜி.வி.பிரகாஷ். டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் வெற்றி அவரை நிலையான ஹீரோவாக்கி விட்டது. அதோடு விஜய் சேதுபதி பாணியில் ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, கொம்பு வச்ச சிங்கமடா என்ற ஆல்பத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜி.வி.பிரகாஷ், அந்த போராட்டத்திலும் கலந்து கொண்டார். அதையடுத்து நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அதன்பிறகு மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டபோது முதல் ஆளாக அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி சுகன்யா என்பவர், சென்னையில் ஒரு கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இரண்டு வருடம் படிப்பை தொடர்ந்தவருக்கு, மூன்றாவது வருடம் படிப்பதற்கு பணவசதி இல்லாமல் இருப்பதை கேள்விப்பட்ட ஜி.வி.பிரகாஷ், கல்லூரி நிர்வாகத்தோடு பேசி படிப்பை தொடர உதவியிருக்கிறார்.
இந்த கல்லூரி திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. சுகன்யாவின் நிலையை உணர்ந்து ஜெகத்ரட்சன், சுகன்யாவின் படிப்பை தொடர அனுமதித்திருக்கிறார். அதேசமயம் சுகன்யாவின் மற்ற படிப்பு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஜிவி பிரகாஷ் ஏற்று கொண்டிருக்கிறார்.