ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் சங்கமித்ரா. பாகுபலிக்கு இணையான பிரமாண்ட பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கும் இந்த சரித்திர படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா என்ற டைட்டீல் வேடத்தில் நடிக்கயிருந்தார். முதல்பார்வையை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டனர்
அந்த விழாவில் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். ஆனால், பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் உடனடியாக தொடங்கயிருந்த சங்கமித்ரா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து நாயகி தேடும் படலம் நடந்து வந்தது. ஆனால் படம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாததால் படம் டிராப் என்று கூட திரையுலகில் பேசப்பட்டது. இதற்கிடையே ஹிந்தி நடிகை திஷா பதானி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது நடிகை குஷ்பு, சங்கமித்ரா படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருப்பதாகவும், அதற்கான செட் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்ருதிஹாசன் நடிக்கயிருந்த நாயகி வேடத்தில் நடிப்பது யார் என்கிற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.