‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
தமிழ்ப் படங்களின் டீஸர்களைப் பொறுத்தவரை இதுவரை ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் டீஸர்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் டீஸரை இதுவரை 34 மில்லியன்களுக்கு மேலான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
கபாலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது என்ன படம் தெரியுமா? விஜய் நடித்து வரும் 'மெர்சல்'தான். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி யு ட்யூபில் வெளியான 'மெர்சல்' படத்தின் டீஸர் தற்போது இரண்டரை கோடிக்கும் மேலான ஹிட்ஸைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல, உலகளவில் எந்த டீஸருக்கும் கிடைக்காத அளவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான 'லைக்ஸை'யும் பெற்றிருக்கிறது. மெர்சல் படத்தின் டீஸரை இதுவரை 25 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதால் அப்படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீஸர் 22 மில்லியன் ஹிட்ஸ் உடன் 3 ஆவது இடத்திலிருக்கிறது. வேதாளம் சாதனையை தெறியில் முறியடித்தனர் விஜய் ரசிகர்கள். தெறி சாதனையை விவேகம் முறியடிக்க, இப்போது விவேகம் சாதனையை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது விஜய்யின் 'மெர்சல்'.