‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சுசீந்திரன் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கதாநாயகனாக நடிக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 5) சென்னையில் உள்ள சத்ய தியேட்டரில் நடைபெற்றது. வழக்கம்போல் திரையுலகப் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்ட இந்த விழாவில், சுசீந்திரனின் 'நான் மகான் அல்ல' படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் கார்த்தியும் கலந்து கொண்டார்.
அப்போது பேசியபோது சுவாரஸ்யமான ஒரு தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். ''நான் அடிக்கடி எல்லோர்கிட்டேயும் சொல்லுவேன்... 'நான் மகான் அல்ல' படத்தோட சப்ஜெக்ட்டை சுசீந்திரன் என்கிட்ட சொன்னப்ப நான் கேட்ட மாதிரி மறுபடி யார்கிட்டேயும் எந்த சப்ஜெக்ட்டையும் நான் கேட்டதே இல்ல. அவ்ளோ அழகா கதை சொல்லுவார்.”
என்று பாராட்டிய கார்த்தி, ''நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தோட மியூசிக் டைரக்டர் இமான் சாரைப் பார்த்தா அடையாளமே தெரியலை... திடீர்னு ஜி.வி.பிரகாஷ் மாதிரி இளைச்சுட்டார்... இமான் சார்கூட இதுவரைக்கும் நான் ஒர்க் பண்ணதில்ல... அடுத்த படம் பண்ணப்போறோம்... கரெக்ட்டான தீனியும் அந்தப்படத்துல மாட்டிருக்கு. ஐயாம் வெரி ஹேப்பி!'' என்றார் நடிகர் கார்த்தி.
'தீரன்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. அதன் இயக்குநர் வேறு யாருமல்ல, சுசீந்திரன் தான்.