மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'எமன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ராதிகா சரத்குமாரின் 'R STUDIOS' நிறுவனமும், விஜய் ஆண்டனியின் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்' நிறுவனமும் இணைந்து 'அண்ணாதுரை' படத்தை தயாரிக்கின்றன.
ஜி.சீனிவாசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஜய் ஆண்டனி, டயானா இணைந்து நடிக்கும் இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
'பிச்சைக்காரன்' படத்தின் கமர்ஷியல் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி 'சைத்தான்', 'எமன்' ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே குறிப்பிடும்படியான வெற்றியைப் பெறவில்லை.
இந்தநிலையில் தன்னுடைய நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'அண்ணாதுரை' மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி.
தெலுங்கில் 'இந்திரஜித்' என்ற பெயரில் இந்த படம் வெளியாகவிருக்கிறது.
'அண்ணாதுரை' படத்தை அடுத்து உதயிநிதியின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் காளி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி.