‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
இயக்குநர் செல்வராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்களில் அவரது மனைவி கீதாஞ்சலி ஏற்கனவே இயக்குநராகிவிட்டார். செல்வராகவனின் கதையை மாலை நேரத்து மயக்கம் என்ற பெயரில் இயக்கினார். எடிட்டர் லங்கா பாஸ்கரின் மகனை ஹீரோவாக வைத்து இயக்கிய அந்தப் படம் தோல்வியடைந்தது.
கீதாஞ்சலி செல்வராகவனுக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் ஒருவர் தற்போது இயக்குநராகி இருக்கிறார். செல்வராகவனிடம் பல வருடங்கள் பணியாற்றி அனுபவம் பெற்ற வாசன் ஷாஜி இயக்கும் படம் 'வாண்டு'.
இந்த படத்தின் கதை 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த தெருச்சண்டையில் (STREET FIGHT) நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக எழுதப்பட்டிருக்கிறதாம்.
இந்த படத்தில் 'தடையற தாக்க', 'கொம்பன்' படங்களில் நடித்த மஹா காந்தி, 'மெட்ராஸ்' படத்தில் நடித்த ரமா, 'தெறி'யில் நடித்த சாய் தீனா, 'ரோமியோ ஜூலியட்' படத்தில் நடித்த புவனேஸ்வரி, '2.0'வில் நடித்துக் கொண்டிருக்கும் ரவிசங்கர் ஆகியோருடன் அறிமுக நடிகர்கள் சீனு, எஸ்.ஆர்.குணா, ஆல்வின் நடிக்க கதாநாயகியாக ஷிகா நடிக்கிறார்.
அறிமுக இசை அமைப்பாளர் நேசன் இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ், வி.மகேந்திரன் ஆகியோர் கவனிக்கிறார்கள். 'எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் இயக்குநர் வாசன் ஷாஜி, டத்தோ என்.முனியாண்டியுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.