‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தில் நடித்தபோது, நடிகர் ஜெய்யும், நடிகர் நிதின் சத்யாவும் நண்பர்களானார்கள். அந்தப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்கிறது. வெங்கட் பிரபுவின் பார்ட்டி பட்டாளத்தில் இருவருமே இருந்தாலும், இப்போது தனி டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் நிதின் சத்யா.
இதுவரை நடிகராக மட்டுமே இருந்த நிதின் சத்யா, ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து தயாரித்தார். அந்தப் படம் வளரவில்லை. இந்நிலையில் தன்னுடைய நிதித்தேவைக்காக தற்போது ஜெய்யை ஹீரோவாக்கி புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வருகிறார்.
'ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்ஜியம்' மலையாள படத்தின் நாயகியான ரெபா மோனிகா ஜான் இந்தப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக்ஷ்ன், சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
25% படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் நிதின் சத்யா.