மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த பிரியதர்ஷினி, தற்போது இயக்குநராகி இருக்கிறார். பிரியதர்ஷினி இயக்கும் முதல் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு சக்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. ஆகையால் ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகர் வீதம் சிவகார்த்திகேயன், ராணா டகுபட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் கலந்த டிராவல் கதையில் இப்படம் உருவாகிறது. படத்தில் வரலட்சுமிக்கு மாறுபட்ட கேரக்டராம். முடியை பாப் கட்டிங் செய்து கூலிங் கிளாஸ் அணிந்து வித்தியாசமான ரோலில் நடிக்கிறார் வரலட்சுமி.
பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சமீபத்தில் "சேவ் சக்தி" என்ற அமைப்பை தொடங்கினார் வரலட்சுமி. தற்போது அதிலிருந்தே தனது படத்திற்கு சக்தி என்று பெயர் வைத்திருக்கிறார்.