‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கோலிவுட்டில் தற்போது இரண்டாம் பாகங்களின் சீசன் போய் கொண்டிருக்கிறது. எந்திரன் 2(2.O), திருட்டுபயலே-2, சாமி-2, கலகலப்பு-2, இந்தியன்-2 என ஏகப்பட்ட படங்கள் உருவாகியும், உருவாகவும் உள்ள நிலையில் சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளிவந்தது. பிரபு, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், அபிராமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் வெளிவந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி சிதம்பரமே இயக்க உள்ளார். பிரபுதேவா - தமன்னா நடிக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் சார்லி சாப்ளின்-2 உருவாக உள்ளது.