Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கஷ்டம் : ஜரீன் கான்

04 அக், 2017 - 19:25 IST
எழுத்தின் அளவு:
It-is-very-difficult-to-act-in-bold-scene-says-Zareen-Khan

2006-ம் ஆண்டு வெளியான அக்சர் படத்தின் இரண்டாம் பாகமான அக்சர் 2 வில் நடித்திருக்கிறார் நடிகை ஜரீன் கான். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள நிலையில் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்து ஜரீன் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...

அக்சர் - அக்சர் 2 ஒற்றுமை என்ன?
இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறு கதைக்களம் உடையது. ஒரே ஒரு ஒற்றுமை என்றால் முதல்பாகத்தை போலவே இதுவும் திரில்லர் நிறைந்த கதை அவ்வளவு தான். மற்றபடி முதல்பாகத்தோடு எந்த தொடர்பும் இல்லை. அக்சர் 2 வில் ஷீனா சுற்றியே படம் நகரும். தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டால் தன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று எண்ணும் ஷீனா, அதே வேலையால் தான் எவ்வளவு பிரச்னைக்கு உள்ளாகிறார், பின்னர் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் கதை.

ஹேட் ஸ்டோரி 3, அக்சர் 2 இரண்டிலும் நீங்கள் தான் கதையின் நாயகி, இதுப்பற்றி உங்கள் கருத்து?
குறுகிய காலத்தில் எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணவில்லை. இதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். இரண்டு படங்களிலும் நான் தான் ஹீரோ போன்று நடித்திருக்கிறேன். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். என்னை மக்கள் ஏற்று கொண்டுள்ளார்கள், அதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

திடீரென கவர்ச்சிக்கு மாறியது ஏன்?
தனிப்பட்ட காரணம் என்று எதுவும் கிடையாது. ஹேட் ஸ்டோரி 3 பட வாய்ப்பு வந்த போது, அந்தப்படத்தில் நடிக்க நிறைய யோசித்தேன். ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா என்றெல்லாம் எண்ணினேன். ரசிகர்கள் விரும்பியதை தொடர்ந்து இப்படியொரு படத்தில் நடித்தேன்.

நீங்கள் கவர்ச்சியாக நடிப்பதை பற்றி அதிகம் பேசப்படுகிறது, இதுப்பற்றி உங்கள் கருத்து?
சில சமயம் ஏன் இப்படி கவர்ச்சியை பற்றியே பேசுகிறார்கள் என்று நினைப்பது உண்டு. நான் வீர் படத்தில் அறிமுகமான போது, நான் குண்டாக இருக்கிறேன், உடை சரியில்லை என்றெல்லாம் மீடியாக்கள் என்னை டார்க்கெட் செய்தார்கள். அந்தப்படத்தில் நான் குண்டாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னார், கதைக்கு அப்படி ஒரு விஷயம் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். அடுத்தப்படியாக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன் என்கிறார்கள். நான் அப்படி என்ன தவறாக நடித்துவிட்டேன். இன்றைக்கு பெரும்பாலான முன்னணி நடிகைகள் கவர்ச்சியாக, நெருக்கமான காட்சிகளில் நடிக்கிறார்கள்.

நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நீங்கள் சந்திக்கும் பிரச்னை என்ன?
நெருக்கமான காட்சிகளில் நடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். மக்கள் என்ன மாதிரி எடுத்து கொள்வார்கள் என்ற பயம் இருக்கும். அதிலும் ஒரு பெண்ணாக இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் கவனமாக நடிக்க வேண்டும். நமது உடல் அங்கங்கள் கேமராவில் தென்பட்டு விடாமல் பார்த்து பார்த்து நடிக்க வேண்டும். உடன் நடிக்கும் சக நடிகரையும் அனுசரித்து நடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இதுபோன்ற காட்சிகளில் நடிக்க தயாராக இருக்க வேண்டும். என்னை பொறுத்தமட்டில் இப்படியொரு காட்சியில் நடிக்கும் போது மூளையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவ்வளவு கஷ்டமான விஷயம்.

உங்கள் படத்துடன் ஜூலி 2 படமும் மோதுகிறதே...?
அதுப்பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அந்தப்படத்திற்கு வாழ்த்துகள். நான் எப்போதும் எனது படத்தை பற்றி தான் சிந்திப்பேன், என் படம் நன்றாக போகும் என்றும் நம்புவேன். ரசிகர்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியும். ஆகவே பாக்ஸ் ஆபிஸ் பற்றிய டென்ஷன் என்னுள் இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in