‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு மீதான இறுதி தீர்ப்பு அக்., 6-ம் தேதி வெளியாக உள்ளது.
தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்... என சாதனை மேல் சாதனை படைத்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் "மெர்சலாயிட்டேன்" என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டிலே பதிவு செய்திருக்கிறேன். தற்போது அந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அக்., 3-ம் தேதி வரை மெர்சல் படத்தின் விளம்பரத்தில் மெர்சல் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(அக்.,4) வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மெர்சலுக்கான தற்போதைய தடை நீடிக்கப்படுவதாக கூறி, வழக்கின் இறுதிக்கட்ட தீர்ப்பு அக்டோபர் 6-ம் தேதி வழங்குவதாக கூறி விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.