‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக வேண்டியுள்ளது. விரைவில் அந்தப் பாடல் காட்சி படமாகும் எனத் தெரிகிறது.
அந்தப் பாடலுக்காக நடிக்கவும், நடனமாடவும் உள்ள எமி ஜாக்சான், அவருக்கான ஆடைகளை அணிந்து பார்க்க சென்னைக்கு வந்துள்ளார். ஆடைகளின் வடிவமைப்பையும், அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ள எமி, “வாவ், அற்புதம்... ஆடைகள் அனைத்தும் அடுத்த லெவல், ஷங்கரின் பார்வை” எனப் பாராட்டியுள்ளார்.
ஷங்கரின் படங்களில் பாடல் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை மிரள வைக்கும் விதத்தில் இருக்கம். அரங்கமாகட்டும், வெளிப்புறப் படப்பிடிப்பு ஆகட்டும், நடனம், பின்னணியில் நடனமாடுபவர்கள், ஆடைகள் அனைத்துமே அவ்வளவு சிறப்பாக இருக்கும். இதை அவருடைய ஒவ்வொரு படங்களின் பாடல்களிலும் பார்க்கலாம். '2.0' படத்தில் அது வேறு ஒரு தளத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு படத்தின் நாயகி மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.