‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் பதிவு செய்து கொண்டு புதிய படங்களைத் தயாரிக்க மூன்று சங்கங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், திரைப்படம் மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று சங்கங்களில் ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டு தமிழ்ப் படங்களைத் தயாரிக்கலாம்.
ஒவ்வொரு சங்கத்திற்கு எனவும் தனித் தனி விதிகள், கட்டுப்பாடுகள். ஒரு சங்கத்தின் முடிவு மற்றொரு சங்கத்தைக் கட்டுப்படுத்தாது. இருந்தாலும் தலைப்பு பதிவு உள்ளிட்ட சில விஷயங்களில் மூன்று சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படும். மிக மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது மூன்று சங்கத்தினரும் சேர்ந்தும் முடிவு எடுப்பார்கள்.
நேற்று தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தார்கள். அது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு. ஆனால், இந்த முடிவிற்கு கில்டு சங்கத்தின் மூலம் பதிவு செய்து, சென்சார் பெற்ற சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'களத்தூர் கிராமம், திட்டிவாசல், மணி, உப்பு புளி காரம், இங்கிலீஷ் படம், அழகின் பொம்மி, உறுதி கொள்' ஆகிய படங்கள் கில்டு மூலம் பதிவு செய்யப்பட்டு, சென்சார் செய்யப்பட்ட படங்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவை திரைப்படம் மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டு உறுப்பினர்கள் எதிர்ப்பது தேவையற்றது என்றும், இது சம்பந்தமாக அவர்கள் கில்டு நிர்வாகத்திடம் தான் பேச வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
அக்டோபர் 6ம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த புதுப்பட வெளியீடு இல்லை என்ற விவகாரம் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.