‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. அதையடுத்து ராஜா ராணி படத்தில் இயக்குனரானார். இந்த படம் வெளியானபோது மணிரத்னத்தின் மெளனராகம் படத்தை அவர் காப்பியடித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு விஜய் நடித்த தெறி படத்தை அட்லீ இயக்கியபோது விஜயகாந்த் நடித்த சத்ரியன் பட சாயலில் இருப்பதாக சொன்னார்கள்.
இப்போது விஜய் நடிப்பில் மூன்று வேடங்களில் அவர் இயக்கி வரும் மெர்சல் படத்தை ரஜினி நடித்த மூன்று முகம் மற்றும் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படங்களைப்போன்று இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அட்லீ அளித்த ஒரு பேட்டியில், எப்படி இசையில் ஏழு ஸ்வரங்கள் இருக்கிறதோ அதே மாதிரி தான் கதையிலும் காதல், ஆக்சன், சென்ட்டிமென்ட், காமெடி என சில வகையான கதைகள் தான் உள்ளது. அதில் தான் பயணித்தாக வேண்டும். மேலும், முந்தைய இசையமைப்பாளர்களின் சாயல் இப்போதை இசையமைப்பாளர்களின் இசையில் வருவது போன்று, முந்தைய இயக்குனர்களின் படங்களின் சாயல் இப்போதைய இயக்குனர்களின் படங்களில் வருவதை தவிர்க்க முடியாது. இந்த சாயல் எல்லா காலத்திலும் இருக்கும். இதை காப்பி என்று சொல்ல முடியாது.
அதேபோல், நான் இயக்கும் படங்களின் சாயல் எனக்கு பிறகு வரும் இயக்குனர்களின் படங்களில் வெளிப்படலாம். இது யதார்த்தம். அதனால் நான் முந்தைய ஹிட் படங்களை காப்பியடிக்கிறேன் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் அட்லீ.