‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சாப்ட்டான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த திரிஷா, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியான நெகட்டீவ் ரோலில் நடித்திருந்தார். திரிஷாவை முதன் முறையாக அந்த மாதிரியொரு வேடத்தில் பார்த்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதோடு அந்த வேடத்தில் அவர் நல்ல ஸ்கோர் பண்ணியிருந்ததால் அடுத்தபடியாக திரிஷாவுக்கு அதிரடி வேடங்களாக கிடைத்தன.
அந்த வகையில், நாயகி படத்தை அடுத்து இப்போது சதுரங்கவேட்டை-2, கர்ஜனை படங்களில் அதிரடியான நாயகியாக உருவெடுத்துள்ளார் திரிஷா. இதில் சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த் சாமியுடன் எதிரும் புதிருமான ரோலில் நடித்துள்ளார். கதைப்படி திருடியாக நடித்துள்ள திரிஷா, இதுரையில்லாத அளவுக்கு அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், கொடி படத்தைப்போலவே இந்த படத்திலும் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும் என்கிறார்கள்.