‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா, பத்திரிகை நிருபர் வேடத்தில் நடிக்கிறார். சாவித்ரி நடித்த சில முக்கிய படங்களுக்கு கதை எழுதிய அலூரி சக்ரபாணி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் தமிழிலும் மகாநதி என்ற பெயரிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடிகையர் திலகம் என்று தமிழ்ப்பதிப்புக்கு பெயர் வைத்துள்ளனர். சாவித்ரி நடித்து வந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போன்று நடிகையர் திலகம் சாவித்ரி என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.