‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கடந்த சில மாதங்களில் வெளியான படங்களில் இரண்டு படங்கள் பற்றி மிகப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஒன்று, அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்', மற்றொன்று மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'ஸ்பைடர்'.
'விவேகம்' படத்தின் டீசர், டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படம் பெரும் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளிவந்ததும் பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது. படத்தின் வசூலும் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றே கோலிவுட் வட்டாரங்களிலும் தகவல் வெளியானது. அதே சமயம், உலக அளவில் 'விவேகம்' படம் 200 கோடி ரூபாயை வசூலித்ததாக அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகின் வசூல் ஸ்டாரான மகேஷ் பாபு, தமிழில் நேரடியாக நடித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்ற படம் 'ஸ்பைடர்'. தெலுங்கிலும் வெளியான இப்படம் தமிழில் 'விவேகம்' எப்படியான ஒரு வரவேற்பைப் பெற்றதோ அதே போன்ற வரவேற்பையே தெலுங்கிலும் பெற்றது. படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் தெலுங்கில் வந்தன. வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை என்றே டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, பாடல்கள் வெளிவந்த பிறகும், 'ஸ்பைடர்' படம் தெலுங்குப் படம் போல இல்லை, தமிழ்ப் படம் போல இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அது படம் வெளிவந்த பிறகு இன்னும் அதிகமாகப் பரவியது. இருப்பினும் 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு, 60 கோடி ரூபாய் பங்குத் தொகையாக கிடைத்துள்ளது என 'ஸ்பைடர்' தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழில் 'விவேகம்', தெலுங்கில் 'ஸ்பைடர்' ஆகிய இந்த இரண்டு படங்களுக்கிடையே எதிர்பார்ப்பிலும், ஏமாற்றத்திலும் சிலபல ஒற்றுமைகள் இருப்பது ஆச்சரியம்தான்.