‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி கதாநாயகர்களுக்கு மற்ற மொழிகளிலும் ஒரு குறிப்பிட்ட மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
மகேஷ் பாபு போன்றவர்கள் கூட தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததும் அந்த காரணத்தால் தான். பின்னாளில் அவர்களது தெலுங்குப் படங்களுக்கென தமிழ்நாட்டிலும் தனி வசூல் கிடைக்கும் என்பதும் மற்றொரு காரணம்.
தமிழில் வெளியாகும் பல படங்கள் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் செய்யப்பட்டு வெளி வருகின்றன. நீண்ட காலமாகவே தமிழ் நடிகர்களில் கமல்ஹாசனுக்கு மட்டுமே தெலுங்கில் தனி வரவேற்பு இருந்தது. இன்றைய காலகட்டத்தில் தமிழில் முன்னணி நாயகர்களாக இருக்கும் அஜித், விஜய் இருவரில் அஜித்தை விட விஜய்க்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பது 'மெர்சல்' படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியீடான 'அதிரிந்தி' மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜுலை மாதம் வெளியான 'விவேகம்' தெலுங்கு டீசர் இதுவரை 12 லட்சம் பார்வைகளையும், 58 ஆயிரம் லைக்குகளையும் மட்டுமே பெற்றது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு வெளியான 'அதிரிந்தி' டீசர் அதற்குள் 16 லட்சம் பார்வைகளையும், 1,72,000 லைக்குகளையும் பெற்றுவிட்டது. அதிரடி மசாலாப் படமாக உருவாகி வரும் 'அதிரிந்தி' தெலுங்கு ரசிகர்களைக் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.