நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காமல் இருப்பது குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதோடு, பிரகாஷ்ராஜ் தான் பெற்ற தேசிய விருதுகளையும் திரும்பிக் கொடுக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது....
எனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பிக் தரப் போவதாக வெளியாகும் செய்திகளைப் பார்த்து சிரிப்பு தான் வருகிறது. விருதுகளை திருப்பித்தரும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. என்னுடைய நடிப்பிற்காக வழங்கப்பட்ட விருதுகளைப் எண்ணி பெருமைப்படுகிறேன்.
நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாரவில்லை. எந்தவொரு கட்சித் தலைவரிடம் நான் பேசவில்லை. இந்தியாவின் குடிமகனான நான், என்னுடைய பிரதமரின் அமைதியைப் பற்றி பேச விரும்புகிறேன். உங்கள் அமைதி என்னை காயப்படுத்துகிறது என்று சொல்ல விரும்புகிறேன், இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஆனால், பிரகாஷ் ராஜ், விருதுகளை திரும்பக் தர போகிறான் என்று வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.