எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாடலாசிரியர் சினேகனும் ஒருவர். இவர் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டு வெளியே வந்திருக்கிறார். மேலும், இவர் பிக்பாஸ் வின்னராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தன்னைப்பற்றி வெளியாகி வந்த விமர்சனங்களை கண்டு அதிர்ந்து போன சினேகன், தற்போது அதுகுறித்து ஒரு விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாள் வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். அது ஒரு புதிய அனுபவம்.
மேலும், ஆரவ் என் குடும்பத்தில் ஒரு சகோதரன் அவன் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். என் ஆதரவாளர்கள் என் தேல்வியை எதிர்பார்க்காமல் அத்தனை வருத்தத்தையும், ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, அன்பு தேவைப்படுகிற இடத்தில் அரவணைத்தேன். ஆனால் நான் அன்பு செலுத்துவதை சினேகன் கட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சுலபமாக ஒருவரை தொட்டு விட முடியாது. அன்பின் வெளிப்பாடாகத்தான் அவர்களை அரவணைத்தேன். அதை விமர்சனம் செய்துள்ளார்கள். எனக்கு இது பெரிதல்ல. விமர்சனங்களும் தோல்விகளும்தான் என்னை உயர்த்துகின்றன. இதை கண்டெல்லாம் நான் துவண்டு போக மாட்டேன். நம்மை இப்படி சொல்லிருக்கிறார்களே என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது அதற்காகத்தான் இதை பதிவிடுகிறேன்.
அதோடு, பிக்பாஸில் வெற்றி கிடைக்காதபோதும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தோல்வி என்னை சோர்வடைய செய்யவில்லை. நான் எப்போதுமே ஊர் குருவி மாதிரி மேலே மேலே பறந்து கொண்டே தான் இருப்பேன். இன்னும் போராடுவதற்கு காலமும், களமும் அழைக்கின்றன. ரொம்ப வலுவாக பதிவு பண்ண வேண்டும் என நினைக்கிறேன். நான் கிராமத்துக்காரன் என்னை எங்கு நட்டாலும் நான் முளைப்பேன். எனக்காக போராடிய, ஆதரவளித்த அத்தனை ரசிகர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்றேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் சினேகன் தெரிவித்துள்ளார்.