நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருவதால், இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பார்சிலோனா நாட்டுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள விஜய், முன்னதாகவே தனக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டார். அதோடு, படத்தின் முதல் பாதியை பின்னணி இசை இல்லாமலேயே பார்த்து விட்டு சென்றாராம்.
அவர் சென்றதை அடுத்து, மெர்சல் முதல் பாதிக்கு பின்னணி இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான் ஒரு வாரமாக இரவு பகல் என்று இடைவிடாமல் பின்னணி இசையமைக்கத் தொடங்கினாராம். அதையடுத்து தற்போது அவர் இரண்டாவது பாதி படத்திற்கான பின்னணி இசையில் பிசியாக இருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் விஜய்யின் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மியூசிக் ட்ராக் உருவாக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான். அந்த ஒவ்வொரு ட்ராக்கிலும் சில புதுமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறாராம்.