பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாகுபலி போன்று சரித்திர படமாக உருவாகி வரும் பத்மாவதி படத்தில் பாகுபலி படத்தில் பின்பற்றிய விளம்பர யுக்தியை பத்மாவதி படக்குழுவினர் பின்பற்றி வருகின்றனர். பாகுபலி படம் உருவாகி வந்த போது அந்தப்படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இப்போது அதேப்போன்று பத்மாவதி படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தீபிகா, ஷாகித்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்போது ரன்வீர் சிங்கின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ரன்வீர், சுல்தான் அலாவுதின் கில்ஜி வேடத்தில் நடிக்கிறார். சிறிய நீச்சல் குளம் ஒன்றில் அகன்ற மார்பு மற்றும் நீண்ட தலைமுடியுடன் போஸ் தருகிறார் ரன்வீர். படத்தில் ரன்வீர், நெகட்டீவ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த ஸ்டில் இணையதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பத்மாவதி படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வைக்கோம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் வருகிற டிச., 1-ம் தேதி வெளியாகிறது.