கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழித்திரு படத்தின் ஆடியோ விழாவில், அப்பட நாயகியான சாய் தன்ஷிகா மேடையில் பேசும்போது, தனது பெயரை விட்டு விட்டதால் அவரை அடுக்கு மொழியில் கடுமையாக விமர்சித்தார் டி.ராஜேந்தர். அதையடுத்து தான் செய்த தவறுக்கு அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் சாய்தன்ஷிகா. ஆனபோதும் டி.ஆர் தொடர்ந்து அவரை காயப்படுத்தினார். இதையடுத்து நடிகர் சங்க செயலாளரான விஷால், அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் துல்கர்சல்மான் நடித்த சோலோ படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில் காமெடி யனாக நடித்துள்ள சதீசும் வந்திருந்தார். அவர் மேடையில் பேச வரும் போது, ஒவ்வொருவரின் பெயரையும் சொன்னவர், யாருடைய பெயரையாத விட்டு விட்டால் அதுவே பெரிய பிரச்சினையாகி விடும் என்று பயத்தை காட்டியபடி பேசினார்.
அதோடு, இந்த படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அப்போது அவரது பெயரை குறிப்பிட்டபோது, அவர் வந்திருப்பார். ஆனால் அவரைத்தான் வரவிடாம செய்திட்டாங்களே என்றும் சொல்லிக்கொண்டார் சதீஷ்.