கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சிம்புவின் மன்மதன் படத்தில் காமெடியன் ஆனவர் சந்தானம். அதையடுத்து கிடுகிடுவென்று வளர்ந்து முன்னணி காமெடியனாகி விட்ட அவர் சமீபகாலமாக ஹீரோவாகி விட்டார். தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில், சக்க போடு போடு ராஜா என்ற படத்தில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவை இசைய மைப்பாளராக்கியிருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில், தனது நட்பு வட்டார நடிகர்களான ஆர்யா, ஜீவா, உதயநிதி உள்ளிட்ட சிலர் தங்களது படங்களில் நட்புக்காக ஓரிரு காட்சியல் நடிக்க அழைத்துபோது, உங்களுடன் நட்பாக இருக்க எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இனிமேல் நட்புக்காக மற்றவர்களின் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று அடித்து சொல்லி விட்டாராம் சந்தானம்.
இப்படி சொல்லும் சந்தானம், நான் எந்தெந்த நடிகர்களுடன் எல்லாம் காமெடியனாக நடித்தேனோ அவர்கள் எல்லோருமே இப்போதும் என்னுடன் முன்பு போலவே நட்பாக இருக்கிறார்கள். அதோடு, எனது படங்கள் பற்றிய தகவல்களையும் ஆர்வமுடன் கேட்டறிகிறார்கள். அந்த வகையில், என்னை யாரும் போட்டி நடிகராக நினைக்கவில்லை. இப்போதும் நட்பு நடிகராகவே நினைக்கிறார்கள் என்கிறார் சந்தானம்.