கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.
ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை விரைவில் விஜய் டிவி வெளியிடும் என்று கூறப்படுகிறது.