'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
கங்காரு, வந்தாமல உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது மிக மிக அவசரம், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஸ்கெட்ச் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க, இரண்டாவது நாயகி வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
அதுபற்றி ஸ்ரீபிரியங்கா கூறும்போது, மிக மிக அவசரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். முதலில் இவ்வளவு பெரிய வேடத்தை என்னால் நடிக்க முடியுமா என்று பயந்தேன். அந்த அளவுக்கு மொத்த கதையையும் தூக்கி சுமக்கும் கதாபாத்திரம். ஆனால் இயக்குனர் கொடுத்த தைரியத்தில் நடித்தேன்.
முதன்முறையாக போலீஸ் உடையணிந்தபோது, இந்த வேடத்தை சரியாக செய்ய வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு காட்சியையும் உணர்ந்து நடித்தேன். இந்த படத்தின் கதை சமூக பிரச்னையை உள்ளடக்கியது. அதனால் இந்த மிக மிக அவசரம் படம் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஸ்ரீபிரியங்கா.