‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
உனக்கென இருப்பேன் என்ற பெயரில் உருவாகி வந்த புதிய படத்தின் பெயர் உன்னதமானவன் என்று மாற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, "உனக்கென இருப்பேன்" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வந்தது. பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பெயர் உன்னதமானவன் என மாற்றப்பட்டுள்ளது.
புதிய படம் குறித்து டைரக்டர் சுந்தரேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், `மதுரையை பின்னணியாக கொண்ட கதை இது. ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனதில் அவள் இடம் பிடித்தாளா, அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான்? என்பது திரைக்கதை. இந்த படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், என்று கூறியுள்ளார்.