வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
நான் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒத்தாசையாக என் கணவர் இருக்கிறார், என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். அம்மணியின் கவர்ச்சியில் மயங்காத இளசுகளே இல்லை என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வரும் ஸ்வேதா, வசந்தபாலனின் அரவான் படத்தில் நடித்துள்ளார்.
படம் இன்னமும் ரிலீஸ் ஆகாத நிலையில், ஸ்வேதாவின் கேரக்டர் பற்றிய செய்தி வேகமாக பரவி வருகிறது. படத்தில் அம்மணி விலைமாது கேரக்டரில் நடித்துள்ளாராம். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா, திருமணத்துக்கு பிறகு நடிக்கும் முதல் படம் இது. அந்த படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறீர்களே, உங்கள் கணவர் எதுவும் சொல்லவில்லையா? என்றால்... ம்கூம் என்று கூறி பெரிய விளக்கமே கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்.
என் கணவர் என்னை ரொம்பவே புரிஞ்சு வச்சிருக்காரு. கவர்ச்சி காட்சியில் எனக்கு என்ன வேணும் என்பதை கூட அருகிலிருந்து கவனிக்கிறார்னா பாருங்களேன். சூட்டிங் நேரத்தில் எனக்கு ஒத்தாசையாக இருப்பவரும் அவரே, என்று கூறும் ஸ்வேதா, அரவான் பட சூட்டிங்கின்போது தனது கணவரையும் கூடவே வைத்துக் கொண்டாராம்.