'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
கங்காரு, வந்தாமல, கதிரவனின் கோடைமழை ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது பிச்சுவாகத்தி, மிக மிக அவசரம், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில், தான் எந்த பட விழாக்களில் கலந்து கொண்டாலும் அங்கு வந்திருக்கும் டைரக்டர்களிடம் தமிழ் நடிகையான எனக்கு சான்ஸ் கொடுங்கள் என்று உரிமையோடு கேட்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார் ஸ்ரீபிரியங்கா.
அதேபோல், சமீபத்தில் அவர் நாயகியாக நடித்துள்ள பிச்சுவாகத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த டைரக்டர்கள், சாட்டை அன்பழகன், சுந்தரபாண்டியன் டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் தான் பேசும்போது சான்ஸ் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாராம் ஸ்ரீபிரியங்கா. ஆனால் முன்னதாக பேசிய அந்த இயக்குனர் கள், ஸ்ரீபிரியங்காவின் நடிப்பு குறித்து பாராட்டி பேசியதோடு, இவரை மாதிரி தமிழ் பேசும் தமிழ்நாட்டு நடிகைகளை ஆதரிக்க வேண்டும். அதைப்பார்த்து திறமையான தமிழ் நடிகைகள் சினிமாவை நோக்கி வர வேண்டும் என்று பேசினார்கள்.
இந்த பேச்சைக்கேட்டு நெகிழ்ந்து போனார் ஸ்ரீபிரியங்கா. அதனால் பின்னர் தான் பேச வரும்போது, இந்த இயக்குனர்களெல்லாம் என்னைப்பற்றி தெரிந்திருக்க மாட்டார்களோ என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் என்னைப் பற்றியும், என் நடிப்பு பற்றியும் அவர்கள் பெருமையாக பேசுவதைக் கேட்கும்போது எனக்கு எதுவுமே பேசத்தோன்றவில்லை. அவர்கள் மனதில் நான் இருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது என்று ஓரிரு வார்த்தைகளிலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டார் ஸ்ரீபிரியங்கா.