'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
விஜய் டி.வி.யில் லிட்டில் ஜீனியஸ் 2.0 என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 5 பேரை கொண்ட மாணவர் அணி கலந்து கொள்ளும். ஒவ்வொரு போட்டியிலும் இரு பள்ளி மாணவர்கள் மோதுவார்கள். இதற்காக சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, கோவை நகரங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழோடு விளையாடு, ஆல் இன் ஆல் அறிவாளி, யார் ஹீரோ?, உண்மையா பொய்யா என பல ரவுண்டுகள் இந்த போட்டியில் உள்ளது. நிகழ்ச்சியை பார்கவ் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அதோடு சீனியஸ் என்ற ரோபோவும் பங்கேற்பது சிறப்பு அம்சமாகும்.