'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா.. திலேப்-காவ்யா மாதவன் இருவரும் தங்களது வாழ்க்கை துணைகளை விவாகரத்து செய்ததாகட்டும், மீண்டும் தாங்கள் இருவரும் மறுமணம் செய்ததாகட்டும் இரண்டுமே அவர்களது சொந்த வாழக்கை சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் சோஷியல் மீடியாவில் உள்ள சிலர், இந்த இருவரின் அதிரடி மறுமணத்தில் உடன்பாடு இல்லாமல் வெறுப்பாக கருத்துக்களை கூறியதே தவறு.. இந்த நிலையில் குடும்பத்தை பிரித்த நாசகாரி' என்கிற ரேஞ்சில் காவ்யா மாதவனை விமர்சிக்கும் அளவுக்கு வார்த்தைகளில் எல்லைமீறுவது திலீப்-காவ்யா மாதவன் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது..
இதனால் இவர்கள் சோஷியல் மீடியாவில் உள்ள சிலர் மீதும், தங்கள் மீது புழுதி வரை தூற்றிவரும் சில இணையதளங்கள் மீதும் சைபர் க்ரைமில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.. அதன் ஒரு பகுதியாக காவ்யா மாதவனின் சகோதரர் மிதுன் மாதவன் சைபர் செல்லில் புகார் கொடுத்துள்ளார். தன்னை மட்டுமல்லாமல் தனது மகள் மீனாட்சியையும் தரக்குறைவான வார்த்தைகளில் சிலர் விமர்சிப்பது கண்டு, திலீப்பும் இதே முடிவுக்கு வந்துள்ளாராம்.
இன்னொரு பக்கம் இந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு உறுதுணையாக இருந்தார் என திலீப்பின் நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா மீதும், திலீப்-மஞ்சு வாரியருக்குள் தேவையில்லாமல் பிரிவை உண்டாக்கினார் என நடிகை பாவனா மீதும் பலர் அவதூறு பரப்பி வருவதால், அவர்கள் இருவரும் கூட சைபர் செல்லில் புகார் கொடுக்க இருக்கிறார்களாம்.