ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு அவர் நடித்த என்னமோ ஏதோ, வை ராஜா வை படங்களும் தோல்வியையே கொடுத்தன. இந்த நிலையில், கெளதம் கார்த்திக் அதிக நம்பிக்கை யுடன் நடித்துள்ள படம்தான் முத்துராமலிங்கம். இந்த படத்தில் சிலம்பாட் டத்தை மையமாகக் கொண்ட கதையில் நடித்துள்ளார் கெளதம். அவருக்கு தந்தையாக நெப்போலியன் நடித்துள்ளார்.
ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தில் கெளதமிற்கு ஜோடியாக பிரியாஆனந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்காக பக்கா கிராமத்து இளைஞனாக மாறி நடித்துள்ள கெளதம் கார்த்திக், இந்த படம் தனக்கு கமர்சியல்ரீதியாக பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். இதற்கிடையே ஆர்.கண்ணன் இயக் கத்தில் இவன் தந்திரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இந்த படங்கள் வரை தனது சம்பளத்தை உயர்த்தாமல் அடக்கி வாசித்து வந்த கெளதம், புதிதாக தன்னிடம் கால்சீட் கேட்க சென்ற சில தயாரிப்பாளர்களிடம் அதிகப்படியாக சம்பளம் கேட்டுள்ளாராம். இதனால் அவர்கள், முத்துராமலிங்கம் படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு அவரை புக் பண்ணும் முடிவில் உள்ளனர்.