2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

தனது திறமைக்கேற்ற வேடங்களை தமிழ்சினிமா தரவில்லை என்கிற வருத்தம் மலையாள நடிகை பாமாவுக்கு நிறையவே உண்டு.. தற்போது மலையாளத்திலும், தனக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதால் கன்னடத்திலும் மட்டுமே மாறி மாறி நடித்து வருகிறார் பாமா.. அதனால் தானோ என்னவோ அம்மா கேரக்டர்கள் தேடி வந்தாலும் மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார் பாமா. அந்தவகையில் வி.எம்.வினு என்பவர் இயக்கும் 'மறுபடி' என்கிற படத்தில் டீனேஜ் பெண்ணுக்கு தாயாக நடிக்கிறார் பாமா..
சில வருடங்களுக்கு முன்பு வட இந்திய ஜெயிலில் இருந்த தண்டனை கைதியான பெண் ஒருவர் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். பாமாவின் கணவராக நடிகர் ரகுமான் நடிக்கிறார்.. உங்களுக்கே 28 வயதுதான் ஆகிறது.. இப்போதே டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறீர்களே என கேட்டால், ஹீரோவுடன் சேர்ந்து மரத்தை சுற்றி டூயட் பாடிக்கொண்டே இருக்க நான் ஒன்றும் சாக்லேட் கேர்ள் இல்லையே என்கிறார். மேலும் தன்னை பார்ப்பவர்கள் தான் எப்போதும் குழந்தைத்தனமாகவே இருப்பதாக சொல்வதால், அம்மா கேரக்டரில் நடிப்பதற்காக நடை உடை பாவனை, பேச்சு என அனைத்தையும் மாற்றியுள்ளாராம்.




