தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் |

சான்ஸே இல்லை என துல்கர் சல்மான் ரசிகர்களே நினைக்கும் அளவுக்கு பிஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் நடிக்கும் படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.. இதுவரை ஆர்த்தி வெங்கடேஷ் என்கிற மாடல் அழகியும், ஆன் அகஸ்டின் என்கிற சீனியர் மலையாள ஹீரோயினும் மட்டுமே ஒப்பந்தமாகியுள்ளார்கள்.. இன்னும் மூன்று கதாநாயகிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து 'டேவிட்' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ்ரசிகர்களுக்கும் இவர் ஓரளவு அறிமுகமானவர் தான் இந்தப்படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார்..
முன்னதாக சத்யன் அந்திக்காடு டைரக்சனில் தான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தை முடித்துவிட்ட துல்கர் சல்மான் அதை டிச-16ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக வைத்துவிட்டு மெக்ஸிகோ பறந்துவிட்டார். ஆம்.. தற்போது அமல் நீரத் டைரக்சனில் தான் நடித்துவரும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் மெக்சிகோவில் பிஸியாக நடித்து வருகிறார் துல்கர். அதை முடித்துவிட்டு வந்தபின் 'சோலோ' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.