2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தெலுங்கு இண்டஸ்ட்ரியினரை வாய்பிளக்க வைத்திருக்கிறது நேற்று அங்கே வெளியான மோகன்லாலின் 'புலி முருகன்' படத்திற்கு கிடைத்த மாஸ் ஒப்பனிங்கும் வரவேற்பும். மலையாளத்தில் பம்பர் ஹிட் அடித்த இந்தப்படம் சுமார் 125 கோடி வசூலை வாரிக்குவித்துவிட்டு, அதீத எதிர்பார்ப்புடன் தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் நேற்று வெளியானது.. ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்திருந்த ஜனதா கேரேஜ் படம் மோகன்லாலுக்கென தெலுங்கில் ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டதால் ஆந்திரா, தெலுங்கானா இரண்டிலும் சேர்த்து சுமார் 350 தியேட்டர்களில் 'மான்யம் புலி' ரிலீஸ் செய்யப்பட்டது.
மலையாளத்தில் இருந்து வெளியான ஒரு டப்பிங் படத்திற்கு இவ்வளவு மாஸ் ஒப்பனிங் கிடைத்திருப்பது இதுதான் முதன்முறை என்று சொல்கிறார்கள்.. அதற்கு சாட்சியாக பல தியேட்டர்களிலும் க்யூவில் கால்கடுக்க நின்று டிக்கெட் வாங்கிய ரசிகர்களை காண முடிந்தது. பல இடங்களில் காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதால் இன்றிலிருந்து காட்சிகளின் எணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடித்திருக்கிறார் என்றாலும் கூட, ரசிகர்களை நேற்று தியேட்டர்களுக்கு வரவழைத்தது நிச்சயமாக மோகன்லால் தான் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.. ஆக தெலுங்கிலும் தனது ஆதிக்க எல்லையை விரிவுபடுத்துகிறார் மோகன்லால்.