2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் மலையாள இயக்குனர் ரஞ்சித் சங்கர், மலையாளத்தில் கடந்த 2014ல் மம்முட்டி, ஆஷா சரத், மம்தா ஆகியோரை வைத்து இவர் இயக்கிய 'வர்ஷம்' படம் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது. ஒரே ஒரு மகனை, ஏதோ ஒருவிதத்தில் பறிகொடுத்த பெற்றோர்கள், சோகத்தில் அப்படியே முடங்கிவிடாமல் தங்களது வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகரவேண்டும் என்கிற சமூகப்பார்வையை அதில் காட்டியிருந்தார் ரஞ்சித். இந்தப்படத்தில் மம்முட்டியிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடம் ஒன்றை இப்போது குறிப்பிட்டுள்ளார் ரஞ்சித் சங்கர்.
இந்தப்படத்தில் மம்முட்டி அவர் மகனுடன் இருக்கும் காட்சிகளை எல்லாம் எடுத்த முடித்தபின், அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் சோகமயமாக வாழும் சில நாட்களை காண்பிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கியதாம். மகன் இறந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்த மம்முட்டி, இரண்டு நாட்கள் கழித்து கதவை திறந்துகொண்டு வெளிவருவது போன்ற காட்சி.. இதற்காக ஷாட் தயார் செய்து வைத்து எதிர்பார்த்து நின்ற நிலையில் அந்த காட்சியில் நடிக்க தயக்கம் காட்டினார் மம்முட்டி.. இயக்குனர் காரணம் கேட்டதற்கு தான் அணிந்திருக்கும் சட்டை தனக்கு பொருத்தமாக இல்லை என்று கூறினாராம்..
இதற்கு முன் படமாக்கப்பட்ட காட்சிகளில் நீங்கள் இதுபோன்ற சட்டைகள் தானே அணிந்து நடித்தீர்கள் என இயக்குனர் கூறியுள்ளார்.. அதற்கு மம்முட்டியும், “உண்மைதான்.. ஆனால் அந்த சூழல் வேறு.. அது மகன் உயிருடன் இருக்கும்போது நிலவிய சந்தோஷ சூழல்.. இப்போதோ மகன் இறந்தபின் சரியாக சாப்பிடாமல், தூங்காமல், உடல் மெலிந்துபோய் காட்சியளிக்கும் தந்தையை, அவரது சோகத்தை அவர் அணிந்திருக்கும் உடையே காட்டிவிடும்.. அதனால் சற்றே தொளதொளவென சட்டை அணிந்தால் நன்றாக இருக்கும்” என கூறிய மம்முட்டி, கையோடு தானே ஆளை அனுப்பி அப்படி ஒரு சட்டையை வரவழைத்து அதை அணிந்து நடித்தாராம்.
மம்முட்டியின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட அந்த காட்சி அவர் சொன்னதைப்போலவே மிகவும் இயல்பாக வந்தது என்றும்.. ஆடை என்பது மனிதனின் சூழலை உணர்த்துவதில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதையும் மம்முட்டியிடமிருந்து தான் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ரஞ்சித் சங்கர்.