2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமான பாடகியான அம்ரிதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு.
சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகளின் வாழ்க்கையில் விளையாடும் விவாகரத்து இவரது வாழ்க்கையிலும் விளையாடியது.. ஆம்.. சமீபத்தில்தான் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்தார் பாலா. இதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக பதில் கூறாத பாலா, சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் யார்மீதும் கண்மூடித்தனமான அன்பும் நம்பிக்கையும் வைத்து விடுவேன் என்றும், தான் விவாகரத்து வரை செல்வதற்கு அதுவே ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் கூட தனது மனைவி அமலாபாலிடம் இருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தபோது, திருமண வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும், துரோகம் இருக்க கூடாது என கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.