2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மலையாளத்தில் திலீப் நடித்த 'கிங் லையர்' என்கிற படம் வெளியாகி சூப்பர்ஹிட்டும் ஆனது. நடிகரும் இயக்குனருமான லால் இயக்கிய இந்தப்படத்திற்கு அவரது நண்பரான சித்திக் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.. அதை தொடர்ந்து தனது பட டைரக்சன் வேலைகளை கவனிக்க களமிறங்கிய சித்திக், 'ஃபக்ரி என டைட்டில் வைத்து படப்பிடிப்பையும் ஆரம்பித்தார். ஜெயசூர்யா தான் படத்தின் ஹீரோ. முதலில் படத்திற்கு 'லக்கி' என பெயர் வைக்கப்பட்டு அதன்பின்னர் 'ஃபக்ரி' என பெயர் மாற்றப்பட்டது... இதில் ஜெயசூர்யாவின் கேரக்டர் பெயர் லக்கி.
'அனுராக கரிக்கின் வெள்ளம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரே படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சிணுங்கல் சிங்காரி ரெஜிஷா விஜயன் தான் இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.. தவிர இந்த கூட்டணியில் சித்திக்கின் நண்பர் லாலும் இருக்கிறார்.. ஆனால் நடிகராக மட்டுமே.. அதேபோல நடிகர் சித்திக்கிற்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது... இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டார் சித்திக். இதிலேயே இந்த மூவரின் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் சித்திக்.