2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை என தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பல பாஷைகளில் நம்ம ஊர் ஹீரோக்கள் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம்,காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கொல்லம் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். சில பாஷைகள் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும். சொல்லப்போனால் இன்னொரு பகுதியில் வசிக்கும் மலையாளிகளே அவற்றை புரிந்துகொள்ள சில நேரம் சிரமப்படுவார்கள். மலையாளத்தில் எவர்கிரீன் சூப்பர்ஹிட் என்று சொல்லப்படுகிற 'ராஜாமாணிக்கம்' படத்தில் மம்முட்டி பேசிய திருவனந்தபுரம் பாஷையை ரசிக்காதவர் கேரளாவில் பாக்கி இருக்கமாட்டார்கள்.
இப்போது மம்முட்டி தான் புதிதாக நடித்துவரும் 'புத்தன் பணம்' (புதிய பணம்) என்கிற படத்தில் காசர்கோடு பாஷை பேசுகிறார்.. நித்யானந்தா ஷெனாய் என இந்தப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.. இந்தப்படத்தை மம்முட்டியின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரான ரஞ்சித் தான் இயக்குகிறார்.. இவர்தான் மம்முட்டியை 'பிரஞ்சியேட்டன் தி செய்ண்ட்' படத்தில் திருச்சூர் பாஷையையும், 'பாலேரி மாணிக்கம்' படத்தில் கோழிக்கோடு பாஷையையும் பேசவைத்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.