தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

இன்னும் பத்து நாட்களுக்காவது திலீப்-காவ்யா மாதவன், மஞ்சு வாரியர் இந்த மூன்று பேரும் சோஷியல் மீடியாக்களை கட்டாயம் எந்தவகையிலாவது ஆக்க்கிரமித்திருக்கவே செய்வார்கள்.. காரணம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற திலீப் காவ்யா-மாதவன் அதிரடி திருமணம் தான். மஞ்சு வாரியருக்கு துரோகம் பண்ணிவிட்டார் என திலீப்பை ஒரு சிலர் வருத்தெடுத்துக்கொண்டு இருக்க, இன்னும் சிலரோ திலீப்புக்கு ஆதரவாக மஞ்சு வாரியரின் பக்கமும் தாக்குதல் கணைகளை திருப்பியுள்ளார்கள். குறிப்பாக திலீப்பின் சினிமா நண்பர்கள் தான் இந்த தாக்குதலில் இறங்கியுள்ளனர்.
அவர் பக்கம் நியாயம் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு சின்ன உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்கள்.. நேற்று முன்தினம் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக மஞ்சு வாரியர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு, திலீப்பை விட்டு தான் பிரிந்து வந்தது சரியான முடிவு என மறைமுகமாக சொல்லும் பதிலாகவே இருந்தது.. அந்த பதிவை அவர் மும்பையில் இருந்துகொண்டு பதிவேற்றியதாக பேஸ்புக் காட்டுகிறது. ஆனால் அந்த சமயத்திலோ மஞ்சுவாரியர் கேரளாவில் நடைபெற்று வரும் 'c/o சாயிராபானு' என்கிற படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருந்தார் என்றும், இங்கே இருந்தவர் மும்பையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.